குஜிலியம்பாறை விபத்தில் தாய், மகன் படுகாயம்

குஜிலியம்பாறை, அக். 23: குஜிலியம்பாறையை சேர்ந்தவர் முருகன் (51). மாற்றுத்திறனாளி. இவர் தனது தாயார் குஞ்சம்மாளுடன் (75) கடந்த அக்.19ம் தேதி மூன்று சக்கர டூவீலரில் பாளையத்தில் உள்ள வங்கிக்கு சென்று கொண்டார். குஜிலியம்பாறை மெயின் சாலையில் வந்த போது பின்னால் கரூர் நோக்கி சென்ற மினிவேன் டூவீலர் மீது மோதியது. இதில் முருகன், குஞ்சம்மாள் டூவீலரிலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் மினிவேன் டிரைவரான சேலம் மாவட்டம், நரியனூர் காட்டுவளைவுவை சேர்ந்த விஜயகுமார் (31) மீது வழக்குப்பதிந்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: