டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

துறையூர், அக்.23: துறையூரை அடுத்த உப்பிலியபுரம் அருகே பாலகிருஷ்ணன்பட்டி பேரூராட்சியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து திருச்சி சுகாதாரத்துறை உதவி இயக்குனர் முத்துக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட குழு பேரூராட்சி பகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று டெங்கு புழு இருக்கிறதா என்று ஆய்வு செய்து அதற்கு மருந்து தெளித்தனர். காய்ச்சல் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். பேருராட்சி அலுவலர் நளாயினி தலைமையில் 15வது வார்டில் கடைகளை ஆய்வு மேற்கொண்டபோது வரதராஜ் ராமன் உள்ளிட்ட 6 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உப்பிலியபுரம் அரசு மருத்துவமனை டாக்டர் மதுசூதனன் தலைமையில் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. பேரூராட்சியில் முக்கிய கழிவுநீர் கால்வாய், கழிவுநீர் தேங்காமல் கொசு புழுக்கள் உற்பத்தி ஆகாத வகையில் உடனடியாக தூர்வாரப்பட்டு வருகிறது.

Related Stories: