தொற்றுநோய் ஏற்படும் அபாயம் 53வது வார்டில் அடிப்படை வசதி ஏற்படுத்த வேண்டும் மாநகராட்சி உதவி கமிஷனரிடம் மக்கள் மனு

திருச்சி, அக். 23: திருச்சி 53வது வார்டில் தொற்று நோய் அபாயம் இருப்பதாகவும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் மாநகராட்சி உதவி கமிஷனிரிடம் மனு அளித்துள்ளனர்.திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையரிடம் 53வது வார்டு பொதுமக்கள் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது: 53வது வார்டுக்குட்பட்ட பகுதியான சாந்தஷீலா நகர், ஆதிநகர், லாவண்யா கார்டன் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் பராமரிப்பின்றி மோசமாக உள்ளது. ஆண்களுக்காக கழிப்பிடத்தில் மின்விளக்குகள் எரிவதில்லை. சாக்கடை நீர் வெளியேறாமல் தேக்கி கிடக்கிறது. ேமலும் சாக்கடை நீர் ஆழ்குழாய் குடிநீரில் கலப்பதால் ெதாற்று நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. எங்கள் பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வழங்க வேண்டும். மேலும் அடிப்பை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

Related Stories: