×

இடைப்பாடியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

இடைப்பாடி, அக்.23: இடைப்பாடி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடைப்பாடி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கென்னடி, ராஜகோபால், பழனிசாமி, மாதையன், செல்வராஜ், ராஜாராம், காஜாமெய்தின் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் அர்ச்சுனன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் முத்துகுமரன் ஆகியோர் விளக்கி பேசினர். நெடுஞ்சாலைச்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும். இலவச பஸ் பாஸ் மற்றும் பயணப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags : Highway employees ,
× RELATED வீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு