வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் திருச்சியில் 200 வங்கிகள் மூடல் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருச்சி, அக்.23: வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதில் 200 வங்கிகள் மூடப்பட்டதால் ரூ.500 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.10 பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து நான்கு வங்கிகளாக மாற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு உடனடியாக வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும்.வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாடிக்கையாளர்கள் மீது அதிகமான சேவை கட்டணத்தை திணிக்கக் கூடாது. பெரு நிறுவனங்களின் வாங்கிய கடன்களை உடனடியாக வசூலிக்க வேண்டும். மக்கள் விரோத வங்கிகள் சீர்திருத்தத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் சார்பில் ேநற்று அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

Advertising
Advertising

திருச்சி சாலை ரோட்டிலுள்ள ஒரு வங்கி முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.இது குறித்து வங்கி ஊழியர் சங்கத்தின் திருச்சி மண்டல மாவட்ட பொதுச்செயலாளர் காமராஜ் கூறுகையில், இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் 200 வங்கிகள் மூடப்பட்டது.1000க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். வேலை நிறுத்த போராட்டத்தினால் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: