கல்வி உதவித் தொகை பெற மாஜி படைவீரர் வாரிசுகளுக்கு அழைப்பு

திருச்சி, அக்.23: கல்வி உதவித்தொகை பெற முன்னாள் படைவீரர்கள் வாரிசுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நடப்பு 2019-20ம் கல்வியாண்டில் பி.இ, பி.டெக், பி.டி.எஸ், எம்.பி.பி.எஸ், பி.எட், பி.பி.ஏ, பி.சி.ஏ, பி.பார்ம், பி.எஸ்சி நர்சிங், பிபிடி, எல்.எல்.பி, எம்.சி.ஏ, எம்.பி.ஏ, பி.வி.எஸ்சி., பி.எஸ்.சி அக்ரி, பி.பி.எம்., பி.எஸ்சி பயோ டெக், பி.எப்.எஸ்சி., பி.ஆர்க், பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற ஏனைய பல தொழிற்கல்வி பயில கல்லூரிகளில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு பயிலும் முன்னாள் படைவீரர்களின் மகன்/மகளுக்கு பிரதமர் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் ஆன்லைனில் அனுப்பி வைக்குமாறு டில்லியிலுள்ள மைய முப்படைவீரர் வாரியம் தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய இணைய தள முகவரி: www.ksb.gov.in. 2019-20 ஆண்டில் பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டு முன்னாள் படைவீரர்களின் பெண் வாரிசுகளுக்கு பிரதி மாதம் ரூ.3000 (ரூ.36,000 ஆண்டுக்கு) ஆண் வாரிசுகளுக்கு பிரதி மாதம் ரூ.2,500 (ரூ.30,000 ஆண்டுக்கு) வழங்கப்படுகிறது. இவ்விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.2019-20 ஆண்டில் முதல் ஆண்டு தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு மட்டுமேயானது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2019 ஆகும். எனவே தொழிற்கல்வி பயில தங்களது மகன்/மகள்களை 2019-20 கல்வியாண்டில் கல்லூரியில் சேர்த்துள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: