தியேட்டர்களில் கூடுதல் கட்டணமா? புகார் அளிக்க போன் எண்கள் வெளியீடு

திருச்சி, அக்.23: திருச்சி மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.திருச்சி மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுவதை பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக கோட்ட வாரியாக சப்.கலெக்டர், ஆர்டிஓக்கள் தலைமையில் காவல்/வணிக வரித்துறை அலுவலர்கள் கொண்ட சிறப்பு குழு அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி திருச்சி கோட்டத்தில் உள்ள தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தை 0431-2415734 என்ற போன் எண்ணிலும், ரங்கம் கோட்டத்துக்கு 0431-2690603 என்ற எண்ணிலும், லால்குடி கோட்டத்துக்கு 0431-2541500, முசிறி கோட்டத்துக்கு 04326-260335 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: