×

ராசிபுரத்தில் போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு

ராசிபுரம், அக். 23: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள நரசிம்ம தெரு பகுதியை சேர்ந்தவர் சௌண்டம்மாள்(65). இவர் நேற்று மதியம் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த இரண்டு வாலிபர்கள், சௌண்டம்மாளை வழிமறித்து, தாங்கள் போலீஸ் எனக்கூறியுள்ளனர். தொடர்ந்து தற்போது பண்டிகை காலம். ஏதற்காக இவ்வளவு நகைகளை அணிந்து செல்கிறீர்கள், இங்கு வழிப்பறி அதிகம் நடப்பதால், உங்களது நகைகளை கழற்றி பையில் வைத்து எடுத்துச் செல்லுங்கள் என கூறியுள்ளனர். இதையடுத்து சௌண்டாம்மாள், 7 பவுன் கொண்ட இரண்டு செயின்களை கழற்றி பையில் வைத்து எடுத்துச்சென்றார். சிறிது தூரம் சென்றதும், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில், மீண்டும் அதே வாலிபர்கள் வந்துள்ளனர்.அவர்கள் நகைளை பையில் வைத்து எடுத்துச்செல்வதை காட்டிலும், பேப்பரில் வைத்து கட்டி எடுத்துச்செல்லும்படி தெரிவித்தனர். இதையடுத்து சௌண்டம்மாள், அந்த நகைகளை எடுத்து பேப்பரில் வைத்து பொட்டலம் கட்டியுள்ளார். அப்போது வாலிபர்கள் அந்த பொட்டலத்தை வாங்கி பார்த்துவிட்டு, சௌண்டம்மாளிடம் பொட்டலத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்.

வீட்டிற்கு சென்று சௌண்டாம்மாள், பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது நகைக்கு பதிலாக கற்கள் இருந்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தார். பொட்டலம் சரியாக மடித்துள்ளாரா என வாங்கி பார்த்த வாலிபர்கள், பொட்டலத்தை மாற்றி 7 பவுன் நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சௌண்டாம்மாள் ராசிபுரம் போலீசில் புகார் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவை பெற்று, சௌண்டம்மாளிடம் நூதன முறையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்

Tags : jewelery ,Rasipuram ,brother ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து