×

நாமக்கல் பகுதியில் 3 நாள் மழை பெய்யும்

நாமக்கல், அக். 23: நாமக்கல் பகுதியில் 3 நாட்கள் மழை பெய்யும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 3 நாட்களும் நாமக்கல் மாவட்ட வானிலையில் நல்ல மேகமூட்டமும், மிதமான மழைப்பொழிவும் காணப்படும். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் மழை பெய்யும் என்பதால், கோழிகளில் தீவன எடுப்பு பெரும்பான்மையான உயர் மனைகளின் கோழிகளில் காணப்படும். முட்டை எடையும் கூடும். முட்டை ஓட்டின் தரத்தை மேம்படுத்த வைட்டமின் டி3யின் அளவை தீவனத்தில் உயர்த்த வேண்டும். இடி மின்னல் அதிகமாக காணப்படும். பிற்பகல் நேரங்களில். கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. முள்கம்பி வேலியில் மாடுகளை கட்ட வேண்டும். மேய்ச்சலையும் அதன் அருகில் தவிர்க்க வேண்டும். இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : region ,Namakkal ,
× RELATED சென்னை ராயபுரம் மண்டலத்தில்...