×

அட்மா திட்டத்தில் விவசாயிகள் சுற்றுலா

நாமகிரிப்பேட்டை, அக். 23: நாமகிரிப்பேட்டை வட்டார விவசாயிகள், திருச்சியில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரிக்கு, சுற்றுலா சென்றனர். நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், அட்மா திட்டத்தின் கீழ், திருச்சியில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரிக்கு சுற்றுலா சென்றனர். வேளாண் பொறியாளர் பிரபா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்ரீதரன் ஆகியோர், 20 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் என 50 பேரை அழைத்து சென்றனர். அங்கு புளி ஓடு எடுக்கும் இயந்தரம் மற்றும் தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம் ஆகியவற்றை விவசாயிகள் பார்வையிட்டனர். இந்த இயந்திரங்களால் ஏற்படும் பயன்கள் குறித்து அதிகாரிகள், அவர்களுக்கு எடுத்துரைத்தனர். சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் தியாகராஜன், விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Adma ,
× RELATED 100 நாள் வேலைத் திட்டத்தில்...