×

நைனாமலையில் ஐப்பசி திருவிழா

சேந்தமங்கலம், அக்.22: நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்துள்ள நைனாமலையில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு புரட்டாசி  உற்சவ திருவிழா, 5 வாரம் நடைபெறுவது வழக்கம். தற்போது 4 வாரங்கள் புரட்டாசியில் முடிந்து விட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் மலையேறி பெருமாளையும், பாத மண்பத்தில் உள்ள ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்தனர். இதற்காக நாமக்கல், ராசிபுரம், சேலத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், நைனாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : festival ,
× RELATED செப்டம்பரில் வெனிஸ் திரைப்பட விழா