×

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

நாமக்கல், அக். 23: நாமக்கல் மாவட்டத்தில் நேற்று, வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கைவிட வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள 135 வங்கி கிளைகளில் பணியாற்றும் 350க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று பணிக்கு வராமல், இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் காரணமாக பெரும்பாலான வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டது. வேலைநிறுத்தத்தால், மாவட்டம் முழுவதும் கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை தடைபட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். ஸ்டேட் வங்கிகள் வழக்கம் போல இயங்கியது.

Tags : Bank employees ,
× RELATED இந்தியா 2 வகைகளில் பொருளாதார பின்னடைவை...