×

அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்

கும்பகோணம், அக். 23: தேசிய ரத்ததான தினத்தையொட்டி கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் தலைமை அரசு மருத்துவமனை மற்றும் கல்லுாரியில் உள்ள பல்வேறு மாணவர்கள் அமைப்புகள் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொ) சினநேசன் தலைமை வகித்தார். முகாமை தேசிய மாணவர் படை கமாண்டிங் அலுவலர் நாயர்,  நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி எட்வேர்ட் சாமிவேல் துவக்கி வைத்தனர். இதில் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் தன்னார்வ சங்கங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.

Tags : Rattana Camp ,Government College ,
× RELATED திருவாரூர் மத்திய பல்கலைக்கழக...