மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட சுவர்களில் விரிசல் நோயாளிகள் அச்சம்

பாபநாசம், அக். 23: மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட சுவரில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.பாபநாசம் அருகே மெலட்டூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகின்றது. 1972ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு, கண் மருத்துவம், பல் மருத்துவம், காசநோய் பிரிவு, ஆய்வகம், எக்ஸ்ரே இயங்கி வருகிறது.இதில் 5 டாக்டர்கள், 40 செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த சுகாதார நிலையத்தில் 3 கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்களின் மேற்கூரை பெயர்ந்து விழுகிறது. மேலும் கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையததுக்கு தினம்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். மெலட்டூரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு இந்த சுகாதார நிலையத்தை விட்டால் வேறு வழியில்லை. எந்நேரமும் விழும் நிலையில் உள்ள சுகாதார நிலையத்துக்கு நோயாளிகள் அச்சத்துடன் தான் வந்து செல்கின்றனர்.இந்த சுகாதார நிலைய வளாகத்தை சுற்றிலும் தனியார்களின் ஆக்கிரமிப்புகள் வேறு. எனவே நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு சேதமடைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை முழுவதுமாக இடித்து விட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு புதிதாக தரமான முறையில் கட்ட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : building ,Melatoor Government Primary Health Center ,
× RELATED மதுரை, விருதுநகருக்கு அனுப்பப்படும்...