×

கும்பகோணம்- தஞ்சை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் வலியுறுத்தல்

பாபநாசம், அக். 23: கும்பகோணம்- தஞ்சை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென பாபநாசத்தில் நடந்த ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பாபநாசத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம் நடந்தது.
கிளை தலைவர் சுப்பு.தங்கராசன் தலைமை வகித்தார். மதிப்பியல் தலைவர் கந்த.சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் அரிமா துரைசாமி வரவேற்றார்.உதவி செயலாளர் திருவேங்கடம் கடந்த மாத கூட்ட அறிக்கையை வாசித்தார். பொருளாளர் சண்முகம் கடந்த மாத வரவு செலவு அறிக்கையை வாசித்தார்.

கூட்டத்தில் கும்பகோணம்- தஞ்சாவூர் சாலையை விரிவாக்கம் செய்து தரமான முறையில் சாலையை அமைக்க வேண்டும். அன்னுக்குடி, திருப்பாலத்துறை, கோபுராஜபுரம் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருதால் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கும் விதமாக அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் ஜெயராமன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.Tags : Government Officers ,Kumbakonam-Tanjai Road ,
× RELATED அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வயிற்றில் அடிப்பதா?