×

மத்திகிரியில் டிஒய்எப்ஐ ஆர்ப்பாட்டம்

ஓசூர், அக்.23: ஓசூர் அருகே உள்ள மத்திகிரியில் ஐந்து அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி டிஒய்எப்ஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் மாநகராட்சியில் உள்ள மத்திகிரி 43வது வார்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி டிஒய்எப்ஐ சார்பில் மத்திகிரி பஸ் நிலையம் முன்புஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு டிஒய்எப்ஐ மத்திகிரி கிளை தலைவர் மல்லேஷ் தலைமை வகித்தார். கிளை செயலாளர் பூபதி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஸ்ரீதரன், மாவட்ட செயலாளர் சுரேஷ், ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தில் பழைய மத்திகிரி பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தரவேண்டும். கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். பழைய மத்திகிரி 43வது வார்டில் மயானத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஒன்றிய செயலாளர் நாகேஷ் பாபு, ஒன்றிய பொருளாளர் ஆங்கிலன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DYFI ,demonstration ,Mathigiri ,
× RELATED நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்