×

இலக்கியம்பட்டி காதுகேளாதோர் பள்ளியில் நுழைந்த பாம்பு சிக்கியது

தர்மபுரி, அக்.23: தர்மபுரி இலக்கியம்பட்டி காதுகேளாதோர் அரசு பள்ளியில், நுழைந்த 7 அடி நீளம் கொண்ட நாக பாம்பு சிக்கியது. தர்மபுரி- சேலம் மெயின்ரோட்டில் இலக்கியம்பட்டி காதுகேளாதோர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் 70பேர் படித்து வருகின்றனர். பள்ளியின் தேவையற்ற மரச்சாமான்களை ஒரு அறையில் போட்டு வைப்பது வழக்கம். தற்போது மாவட்டம் முழுவதும் டெங்கு பரவி வருவதால், மரச்சாமான்கள் உள்ள அறையை சுத்தம் செய்யும் பணியில் நேற்று பள்ளி ஆசிரியைகள் ஈடுபட்டனர். அப்போது அறையின் உள்ளே பாம்பு இருப்பது தெரியவந்தது. இதனால் பள்ளியில் உள்ள ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி ஆசிரியைகள் உடனடியாக, தர்மபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில், தர்மபுரி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில், தீயணைப்பு படை குழுவினர் இலக்கியம்பட்டி காதுகேளாதோர் பள்ளிக்கு சென்று, சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி 7 அடி நீளம் உள்ள ஒரு நாக பாம்பை உயிருடன் பிடித்தனர். பிடிக்கப்பட்ட பாம்பை ஒரு சாக்கில் போட்டு கட்டி, தர்மபுரி வனத்துறையினரிடம் தீயணைப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags : school ,
× RELATED திருவில்லிபுத்தூர் அருகே கோழி...