×

குடும்பம் நடத்த வருமானம் இல்லாததால் விரக்தி தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூர், அக்.23: குடும்பம் நடத்த போதுமான வருமானம் இல்லாததால் விரக்தியடைந்து பெரம்பலூரில் தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டார்.சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் முரளிதரன்(27) இவர் கடந்த 9ஆண்டுகளாக பெரம்பலூர் அருகேயுள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இதற்காக பெரம்பலூர் வெங்கடேசபுரம், சந்தர் நகரில் சுப்ரமணி மகன் நவரத்தினம்(50) என்பவருக்குச் சொந்தமான அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஒரு அறையில், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகேயுள்ள பெரிச்சா கவுண்டம்பாளையம் கிராமத் தைச் சேர்ந்த பழனி மகன் செல்வக்குமார்(29) என்பவருடன் ஒன்றாகத் தங்கி டயர் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார்.

செல்வக்குமாரும், முரளி பணிபுரியும் அதே டயர் தொழிற்சாலையில் தான் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வேலைக்குச் செல்லாமல் அறையிலேயே தங்கிக்கொண்டார். இவரு டன் தங்கியுள்ள செல்வக்குமார் இரவுப் பணியை முடித்து விட்டு, நேற்று காலை அறைக்குத் திரும்பிய போது, அறை உட்புறம் தாழ்ப்பாள் போட்டிருப்பதைக் கண்டு தட்டிப் பார்த்தும் நீண்டநேரம் கதவுதிறக்கப்படாததால், ஜன்னலைத் திறந்து பார்த்த போது அறைக்குள் முரளி தரன் தூக்குமாட்டித் தற்கொலை செய்து இறந்தது தெரியவந்தது.இதுகுறித்து செல்வக்குமார் பெரம்பலூர் போலீசில் கொடுத்தப் புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முரளிதரனின் சடத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் முரளியின் அறையில் நடத்திய சோத னையில் இறந்து போன முரளிதரன், தனது குடும்பத்தை நடத்தப் போதுமான வருமானத்தை தன்னால் சம்பாதிக்க முடியாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக எழுதி வைத்தக் கடிதம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : tire factory employee ,suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை