×

ஆனந்தவாடியில் நாளை சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கத்துக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

அரியலூர், அக். 23: ஆனந்தவாடியில் அரசு சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கத்துக்காக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்று கருத்துகள் சொல்ல பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அரியலூர் வட்டம் கயர்லபாத் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஆனந்தவாடி சுண்ணாம்புக்கல் சுரங்கம் சொந்த பயன்பாட்டுக்கான சுரங்க விரிவாக்கம் செய்ய உத்தேசித்துள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஆனந்தவாடி- இரும்புலிக்குறிச்சி மெயின் ரோடு, ஆனந்தவாடி கிராமத்தில் நாளை நடக்கிறது. கலெக்டர் ரத்னா தலைமை வகிக்கிறார.

இதில் பொதுமக்கள் பங்கேற்கு தேவையான தகவல்கள் மற்றும் விளக்கங்கள் பெறலாம். மேலும் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை கூறலாம். அவை பதிவு செய்யப்பட்டு  டெல்லி மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். கூட்டத்தில் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் மீதான குறிப்பிடத்தகுந்த வாய்ப்பை பெற்றிருக்கும் சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம்.இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags : Public Litigation Meeting ,Expand Limestone Mine ,Anandavadi ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்...