×

அடையாளம் தெரியாத பெண் சடலம் போலீஸ் விசாரணை

ஜெயங்கொண்டம், அக். 23: உடையார்பாளையம் அருகே அடையாளம் தெரியாத பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உடையார்பாளையத்தில் இருந்து சிலால் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடையின் சிறிது தூரத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த தகவல் கிடைத்ததும் உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்து கிடந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : corpse police investigation ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்...