×

வங்கிகள் இணைப்பை கைவிடகோரி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாடிக்கையாளர்கள் பாதிப்பு

பெரம்பலூர், அக். 23: வங்கிகள் இணைப்பை கைவிடகோரி பெரம்பலூரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர்.  10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 வங்கிகளாக இயங்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். இந்த நடவடிக்கையால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த வங்கிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் இணைப்பு நடவடிக்கையை எதிர்த்தும், வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் செயலை கண்டித்தும் அகில இந்திய அளவில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டதோடு பண பரிமாற்றம் செய்ய முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிக்கு உள்ளாகினர்.

Tags : Bank Employees ,Strike ,Customers ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து