×

பாப்பாரப்பட்டி அருகே டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்

பாப்பாரப்பட்டி, அக்.23: பாப்பாரப்பட்டி அருகே மாக்கனூரில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்தது. பாப்பாரப்பட்டி அருகே, மாக்கனூர் கிராமத்தில் மர்ம காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொண்டு, மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்த செய்தி, கடந்த வாரம் தினகரன் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக, மாக்கனூர் கிராமத்தில் பஞ்சாயத்து உதவியாளர் சண்முகம் தலைமையில், 10க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், தீவிர துப்புரவு  பணிகளில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை சார்பில், வட்டார மருத்துவர் சக்திவேல் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஜெயபிரகாஷ் அனைத்து வீடுகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags : Papparapatti ,
× RELATED வருசநாடு அருகே கண்மாய் கரையை பலப்படுத்தும் பணி தீவிரம்