×

புட்டிரெட்டிபட்டி சாலையோரத்தில் சாய்ந்த மின் கம்பம் சீரமைப்பு

கடத்தூர், அக்.23: கடத்தூர் அருகே புட்டிரெட்டிபட்டி சாலையோரத்தில் சாய்ந்த நிலையில் இருந்த மின் கம்பம் சீரமைக்கப்பட்டது. கடத்தூர் அருகே புட்டிரெட்டிபட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர் குடியிருப்பில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் மின் தேவைக்காக, புட்டிரெட்டிபட்டி சாலையில், கான்கிரீட் மின் கம்பம் அமைக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த 6மாதமாக, மின் கம்பம் சாய்ந்த நிலையில் இருந்ததால், மின் விபத்து அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இது குறித்து மக்கள் பல முறை புகார் கூறியும், நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கு காட்டி வந்ததாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இது குறித்த செய்தி, தினகரன் நாளிதழில் ேநற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, கடத்தூர் மின் வாரியம் சார்பில், சாய்ந்திருந்த மின் கம்பத்தை நேற்று சீரமைத்தனர். மேலும் அதே பகுதியில் சேதமடைந்த 4 மின் கம்பங்களையும் சீரமைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Putrettipatti Road ,
× RELATED திருநின்றவூர் பேரூராட்சியில் மின் மோட்டார் சீரமைப்பு