×

ஊத்துக்குளியில் 49 மி.மீ. மழை பதிவு

திருப்பூர், அக். 23: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக  ஊத்துக்குளி பகுதியில் 49 மி.மீ. மழை பதிவானது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால், உடுமலை அமராவதி, திருமூர்த்தி ஆகிய அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. விவசாயிகள் உழவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ‘நேற்று முன்தினம் இரவு பெய்த மழை நிலவரம் (மில்லி மீட்டரில்): திருப்பூரில் 5.10, அவிநாசி-3, காங்கயம்-10, தாராபுரம்-9, மூலனுார்-20, குண்டடம்-6, அதிகபட்சமாக ஊத்துக்குளியில் 49 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Tags :
× RELATED கேரளாவில் இன்று மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி