×

தீபாவளியையொட்டி கூட்டுறவு சிறப்பங்காடியில் பட்டாசு விற்பனை துவக்கம்

திருப்பூர், அக். 23:  தீபாவளி பண்டிகையையொட்டி, திருப்பூர் வளர்மதி கூட்டுறவு சிறப்பங்காடியில் பட்டாசு விற்பனை நேற்று தொடங்கியது. தீபாவளி பண்டிகை வரும் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கூட்டுறவு விற்பனை சிறப்பங்காடிகள் சார்பில் பட்டாசு விற்பனை தொடங்கப்பட்டுள்ளன. திருப்பூரில் இந்த ஆண்டுக்கான தீபாவளி பட்டாசு விற்பனை நேற்று காலை தலைமை அலுவலகமான புஷ்பா சந்திப்பு அருகே உள்ள வளர்மதி கூட்டுறவு சங்க வளாகத்தில் தொடங்கியது. பட்டாசு விற்பனையை வளர்மதி கூட்டுறவு சங்க தலைவர் கருணாகரன் தொடங்கி வைத்தார். இதில் சங்க துணை தலைவர் தாமோதரன், மேலாண்மை இயக்குனர் சண்முகவேல், மேலாளர் இளங்கோ உள்பட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

சிவகாசியில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்வதால் மற்ற இடங்களை விட குறைவான விலையில் பட்டாசுகளை விற்பனை செய்கிறோம் என்றும், ரூ.227 முதல் ரூ.1,800 வரையிலான கிப்ட் பாக்ஸ்கள் உள்பட அனைத்து விதமான பட்டாசுகளும் விற்பனைக்கு உள்ளது என தலைவர் கருணாகரன் தெரிவித்தார். இந்த விற்பனை காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை புஷ்பா சந்திப்பு அருகில், காங்கயம் ரோடு பத்மினி கார்டன் எதிரில் மற்றும் பி.என்.ரோடு பிச்சம்பாளையம்புதூர் பெட்ரோல் பங்க் அருகில் என 3 இடங்களில் நடைபெறுகிறது.

Tags : Commencement ,Diwali ,
× RELATED ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த...