இளம் வழக்கறிஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 23:இளம் வழக்கறிஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் திருப்பூர் சார்பு நீதிமன்ற வளாகத்தின் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. திருப்பூர் சார்பு நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் பொன்ராம், மத்திய குழு உறுப்பினர் மனவாளன், மாநகர துணைத்தலைவர் கெளரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

Tags : Demonstration ,lawyers ,
× RELATED தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை