×

தோகைமலை வடசேரியில் ஆக்கிரமிப்பு செய்த இடங்கள் மாவட்ட திட்ட இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தோகைமலை, அக். 23: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே வடசேரியில் திருச்சி ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்து உள்ள பகுதியை கரூர் மாவட்ட திட்ட இயக்குனர் கவிதா ஆய்வு செய்தார்.ஆக்கிரமிப்பு பகுதிகளை ஆய்வு செய்தபின்பு எல்லை கல் உள்ள இடம் வரை ஆக்கிரமிப்புகளை தாங்களே 15 நாட்களுக்குள் முழுமையாக அகற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் தெரிவித்தார். அப்போது திட்ட இயக்குனர் கவிதாவிடம் பொதுமக்கள் கூறும்போது:வடசேரியில் இருந்து செல்லும் இந்த சாலைவழியாக வடசேரி ஊராட்சி உள்பட 4 ஊராட்சி கிராமங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனால் திருச்சி பகுதிக்கும், மணப்பாறை பகுதிக்கும் 2 அரசு பேருந்துகள் சென்று வந்தநிலையில் புதிய தார்சாலை அமைக்கும் பணியின் போது 2 பேருந்துகளும் நிறுத்தப்பட்டது. அதன்பின்பு புதிய தார்சாலைக்கான பணிகள் 90 சதவீதம் முடிவுற்றது.ஆனால் சாலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டி உள்ளதால் சாலைகுறுகலாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் நிலையிலும் இருந்தது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்மல், புதிய தார்சாலை அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தார்சாலை அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தினோம்.

ஆனால் கடந்த 10 மாதங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பலமுறை மனுக்களை அளித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் முற்றுகை போராட்டம் செய்ய முடிவு செய்ய நேரிட்டது. இதன் பின்பு தற்போதுதான் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். மேலும் பாதியில் நின்ற இடத்தில் தார்சாலையே அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.இதைகேட்டறிந்த திட்ட இயக்குனர் 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்பு விடுபட்ட பகுதிக்கு புதிய தார்சாலை அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்த ஆய்வின்போது தோகைமலை ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன், ஆர்ஐ நீதியரசன், விஏஓக்கள் அண்ணாதுரை, சிவசக்தி, ஊராட்சி மன்ற செயலாளர் கலியராஜ் உடன் இருந்தனர்.

Tags : District Planning Director ,Dohakaimala ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில்...