×

பண்டுதக்காரன்புதூர் ஆராய்ச்சி மையத்தில் பசுந்தீவன உற்பத்தி பற்றிய இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கரூர், அக். 23: பசுந்தீவன உற்பத்தி பற்றிய இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பால் உற்பத்தியில் உலக அளவில இந்தியா முதலிடம் வகிக்கிறது. எனினும் நமது கால்நடைகளின் பால்உற்பத்தித் திறன் குறைவாக ள்ளது. இதற்கு முக்கிய காரணம் கறவை மாடுகளுக்கு போதிய அளவு சரிவிகித சமச்சீர் தீவனம் கிடைப்பதில்லை. குறிப்பாக வறட்சி மற்றும் கோடைக்காலங்களில் பசுந் தீவன பற்றாக்குறை பெரும்பாலான இடங்களில் நிலவுகிறது.எனவே மழைக்காலத்தில போதிய அளவு பசுந்தீவனங்களை உற்பத்தி செய்து எதிர்கால தேவைகளுக்கு சேமித்து வைப்பது முக்கியம்.இதனை கருத்தில் கொண்டு கரூர் மாவட்டம் பண்டுதக்காரன்புதூரில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், பசுந்தீவனங்கள் உற்பத்தி என்ற தலைப்பில் வரும் 30ம்தேதி (புதன்கிழமை) அன்று ஒருநாள் இலவச பயிற்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் கால்நடைகளுக்கான புதிய தீவன ரகங்கள், மானாவாரி, இறவை சாகுபடிக்கேற்ற பயறு வகை மற்றும் புல்வகை தீவனங்கள், களர், உவர் சதுப்பு நிலங்களுக்கு ஏற்ற தீவனப் பயிர்கள், மரவகை முளைப்புத்திறனை அதிகரிப்பதற்கான வழிமுறைகள், பசுந்தீவனங்களில் உள்ள சத்துக்கள், பசுந்தீவனத்தை பதப்படுத்தி சேமித்து வைக்கும் முறைகள், வறட்சி மற்றும் கோடை காலங்களில் பசுந்தீவன பற்றாக்குறையை சமாளிப்பதற்கான வழிகள் ஆகிய தலைப்புகளில் பல்கலைக்கழக பேராசிரியர்களின் விரிவுரை, செயல்முறை விளக்கம், முன்னோடி விவசாயிகளின் அனுபவங்கள், படக்காட்சி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் கலந்து கொள்ள விரும்புவோர் வரும் 30ம் தேதி காலை 10.30 மணிக்கு நிலையத்திற்கு நேரில் வருமாறு மையத்தின் பேராசிரியர், தலைவர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Tags : Panduathakaranpudur Research Center ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...