×

கரூர் வஉசி தெரு அங்கன்வாடி கட்டிடத்தில் படிக்கட்டு உடைந்து சேதம்

கரூர், அக். 23: கரூர் வஉசி தெரு பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிட படிக்கட்டுகள் உடைந்து சிதிலமடைந்து உள்ளது குறித்து பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகரின் மையப்பகுதியில் வஉசி தெரு உள்ளது. இந்த தெரு பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. சிறுவர், சிறுமிகள் வந்து பயிலும் வகையில் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.அங்கன்வாடிக்கென பிரதான நுழைவு வாயில் பகுதியில் மற்றொரு வாசற்படி உள்ளது. இதன் வழியாகத்தான் பணியாளர்கள் மற்றும் சிறுவர்கள் சென்று வருகின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமையலறை கொண்டு வரும் நோக்கில் கட்டிடத்தின் மறுபகுதியில் மற்றொரு வாசற்படி அமைக்கப்பட்டது. சில காரணங்களால் அந்த சமயத்திலேயே அரைகுறையாக வாசற்படிக்கட்டுகள் அகற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகள் இதன் அருகில் அவ்வப்போது சென்று வருகின்றனர். உடைந்த நிலையில் உள்ள படிக்கட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.எனவே படிக்கட்டுக்களை நன்றாக கட்ட வேண்டும் இல்லையெனில் முற்றிலும் சிதைத்து விட வேண்டும் என கூறப்படுகிறது. எனவே இதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Stairway ,building ,Karur Vauzi Street Anganwadi ,
× RELATED ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் திருப்பாலைக்குடி மக்கள் கோரிக்கை