×

வாழைத்தார் திருடிய 2 பேர் கைது

ஈரோடு, அக்.23: ஈரோடு மாவட்டம், கொண்டையம்பாளையம் குட்டையூர் ரோட்டை சேர்ந்தவர் ஜெயக்குமார் (42), விவசாயி. இவர், தனது தோட்டத்தில் செவ்வாழை பயிரிட்டிருந்தார். இந்நிலையில், இவரது தோட்டத்தில் 2 மர்மநபர்கள் உள்ளே புகுந்து, செவ்வாழைத்தார்களை வெட்டிக்கொண்டிருந்தனர்.ஜெயக்குமார் கூச்சல் போடவே, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து வாழைத்தார்களை வெட்டிய 2 பேரையும் பிடித்து, கோபி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில், கோபி கள்ளிப்பட்டி பழையகாலனியை சேர்ந்த ஜெகநாதன் (37), ஏழூர் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த பழனிச்சாமி (31) என தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED சத்தியமங்கலம் அருகே சூறாவளி காற்றால் 20 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்