×

பெட்ரோல் திருடிய 4 பேர் கைது

கிணத்துக்கடவு, அக்.23: கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து டேங்கர் லாரி மூலம் பெட்ரோல் கொண்டு வந்து நெகமத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு இறங்குவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு டேங்கர் லாரி பெட்ரோல் லோடுடன் நெகமம் அருகே உள்ள சின்னேரிபாளையத்தில் ரோட்டோரத்தில் நின்று கொண்டு இருந்தது. அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த கேனில் லாரியில் இருந்து பெட்ரோல் திருடுவது தெரியவந்தது.  லாரியில் இருந்து பெட்ரோல் திருடிய திருவண்ணாமலையை சேர்ந்த கமலேஷ்(36), அதே பகுதியை சேர்ந்த விக்ரம்(26),அய்யாசாமி(40) நெகமம் அருகே உள்ள தேவனாம்பாளையத்தை சேர்ந்த நாகராஜ் (42) ஆகிய நான்கு பேரைநெகமம்  போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED கள்ளத்தொடர்பை துண்டிக்காததால்...