×

ஆதிவாசி இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணம்

பந்தலூர். அக். 23:   பந்தலூர் அருகே கூவமூல பழங்குடியினர் கிராமத்தில் பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மைய கிளையாக மகாத்மா காந்தி பழங்குடியினர் இளையோர் சேவை மையம் தொடங்கப்பட்டது இம்மையத்தின் துவக்க விழா கூவமூல சமுதாய கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மகாத்மா காந்தி சேவை மைய தலைவர் நவஷாத் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் இளையோர் மையத்தின் பயன் பாட்டிற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்க பட்டன. இளையோர் மையத்தினை கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து துவக்கி வைத்தார். செயலாளர் சிவசுப்ரமணியம்  பேசினார். புதிய தலைவராக கேத்தன்,  துணை தலைவராக குமார்,   செயலாளராக குட்டன்,  துணை செயலாளராக சந்திரிகா, பொருளாளர் வடிச்சி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags :
× RELATED சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பழம், காய்கறி அழுகும் அபாயம்