×

ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.22லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பொள்ளாச்சி, அக். 23:   பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.22லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த கொப்பரை ஏலத்தின்போது,  பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், உடுமலை  பகுதியிலிருந்து 89 விவசாயிகள் மொத்தம் 565மூட்டை கொப்பரை கொண்டுவந்திருந்தனர். அவை  முதல் தரம், இரண்டாம் தரம் என பிரிக்கப்பட்டு, விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.

இதில், 295 மூட்டை முதல்தர கொப்பரை ஒருகிலோ, ரூ.90.75 முதல் அதிகபட்சமாக ரூ.95.75 வரையிலும். இரண்டாம் தரம் 270 மூட்டை கொப்பரை ஒருகிலோ ரூ.66 முதல் ரூ.79.35 வரையிலும் ஏலம்போனது. விவசாயிகள் கொண்டு வந்த, மொத்தம் 28 டன் கொப்பரை ரூ.22 லட்சத்துக்கு ஏலம்போனது. அதை வியாபாரிகள் 11 பேர் கொள்முதல் செய்தனர் என, ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Copper auction ,
× RELATED இலவச மின்சாரம் ரத்தா? 22 லட்சம் விவசாய...