×

சப்பந்தோடு கிராமத்திற்கு சாலை வசதி இல்லை

பந்தலூர், அக். 23:  சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட சேரம்பாடி சப்பந்தோடு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தும்  மண்  சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.
சாலையின் இரு புறமும் முற்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது.  

யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
சப்பந்தோடு கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும்  என அப்பகுதி மக்கள் சேரங்கோடு ஊராட்சி மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார்கள் தெரிவித்தும் எந்தவிதமான  நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கிராம மக்களின் நலன் கருதி சப்பந்தோடு கிராமத்திற்கு தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sapandodu ,village ,
× RELATED பழவேற்காடு அடுத்த கோடைக்குப்பம் மீனவ...