×

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

சோமனூர், அக்.23:  சோமனூர் அடுத்த கேபிஆர் பொறியியல் கல்லூரியில் பயோ மெடிக்கல் துறையும், ராயல்கேர் மருத்துவமனையும் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இதில் கேபிஆர் கல்லூரியின் தலைவர் ராமசாமி தலைமை வகித்து பேசுகையில், உணவுப் பழக்கவழக்கங்கள், போதிய உடற் பயிற்சியின்மை, சுற்றுச்சூழல் போன்றவற்றால் இந்த நோய் பெருகி வரும் காலகட்டத்தில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நிச்சயம் அவசியம் என்றார். ராயல்கேர் மருத்துவமனையின் தலைவர் மாதேஸ்வரன் வகித்து பேசுகையில், மேலை நாடுகளில் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு அதற்கான பரிசோதனை முறைகளும் அதிகளவில் உள்ளது.

அதுபோல நம் நாட்டிலும் விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும், ராயல் கேர் சிறப்பு மருத்துவமனையில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடம் ஒரு முறை சோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.மேலும், இந்த நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து காத்துக் கொள்ளவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ராயல்கேர் மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவின் இயக்குனர் டாக்டர் சுதாகரன், கல்லூரியின் முதல்வர் அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் அனைத்து துறை மாணவர்களும் மார்பக புற்றுநோய் தாக்கத்தின் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புற்றுநோய் லோகோ வடிவில் நின்றனர்.

Tags : Camp ,
× RELATED மருத்துவ முகாம்