×

துடியலூரில் நிலவேம்பு கசாயம் விநியோகம்

பெ.நா.பாளையம், அக்.23:  கோவை துடியலூரில் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. துடியலூரில் உள்ள அரசு சித்த மருத்துவமனை சார்பில் காவல் நிலையத்தில்  இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இம்முகாமை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் தொடங்கி வைத்தார். காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அங்கு வந்த பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. அதேபோல் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு ஐடிஐ முதல்வர் செல்வராஜன் தலைமையில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை உதவி மருத்துவ அதிகாரி பாரதி வழங்கினார்.

இது குறித்து பாரதி கூறுகையில், மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி தனம் அறிவுறையின்படி பல பகுதிகளில் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகிக்கபட்டு வருகிறது. இப்பகுதியில் இதுவரை ஆயிரம் நபர்களுக்கு கசாயம் கொடுத்துள்ளோம். பள்ளி கல்லூரி  நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்களுக்கு தேவைப்பட்டால் துடியலூரில் உள்ள சித்த மருத்துவமனையை அனுகினால் நோய் தடுப்பு விழிப்புணர்வு கொடுப்பதுடன் இலவசமாக நிலவேம்பு கசாயமும் வழங்கப்படும் என்றார்.

Tags : Dudiyalur ,
× RELATED கேரளாவில் கொரோனா சமூக பரவல்?