×

தேசிய மாணவர் படை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை,அக்.23: கோவை புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளி தேசிய மாணவர் படை மற்றும் கோவை வடக்கு மண்டல தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. தேசிய மாணவர் படையின் தமிழகம் 2 பீரங்கி படை கமாண்டிங் ஆபிசர் கிரிஸ் பர்தான் தலைமை வகித்தார். கோவை வடக்கு மண்டல தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வமோகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாடுவது குறித்த செயல்முறைகளை செய்து காண்பித்தனர். பாதுகாப்பாக பட்டாசுகளை எவ்வாறு வெடிப்பது எப்படி?, தீ பரவினால் என்ன செய்யவேண்டும்?, தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் விதம் போன்றவை குறித்து செயல்விளக்கம் அளித்தனர். இதில் அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி, புனித தெரசம்மாள் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் ஆல்பர்ட் அலெக்ஸாண்டர் செய்திருந்தார்.

Tags : National Student Force ,
× RELATED மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு...