×

கலெக்டர் அலுவலகம் முற்றுகை எஸ்டிபிஐ கட்சியினர் கைது

கோவை, அக்.23: கோவை இந்து முன்னனி பிரமுகர் கொலை வழக்கில் சிறையில் உள்ள முதியவரை விடுவிக்க கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட எஸ்டிபிஐ கட்சியினரை போலீசார் கைது செய்தனர். கோவையில் இந்து முன்னனி பிரமுகர் வீரசிவா என்பவரது கொலை வழக்கில் கோவையை சேர்ந்த அப்துல்ஹமீது (எ) பிலால் ஹாஜியார் (84) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு உடல்நிலை மோசமாக இருப்பதால் மத்திய சிறையில் இருந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பிலால் ஹாஜியாரை விடுவிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று மாலை எஸ்டிபிஐ கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Tags : STBI ,collector ,
× RELATED கடந்த 24 மணி நேரத்தில் 10,627 பேர் கைது;...