×

பவானி அருகே 40 அடி கிணற்றில் விழுந்த நாய் மீட்பு

பவானி, அக். 23:  பவானி அருகேயுள்ள பெரியபுலியூர், கல்லாங்காட்டுத் தோட்டத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்குச் சொந்தமான நாய் நேற்று அப்பகுதியில் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் எதிர்பாராமல் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. நாயை மீட்க அப்பகுதியினர் முயன்றனர் ஆனால் முடியவில்லை. இது குறித்து, பவானி தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், நிலைய அலுவலர் காந்தி தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தண்ணீரில் தவித்துக்கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்டு, மேலே கொண்டு வந்தனர்.

Tags : Bhavani ,
× RELATED ஊரடங்கால் கைவிடப்பட்ட வெளிநாட்டு...