×

மாவட்ட கேரம் போட்டி 135 மாணவர்கள் பங்கேற்பு

ஈரோடு, அக். 23: ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு அரங்கில் நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் 135 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈரோடு மாவட்ட விளையாட்டு  பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒற்றையர், இரட்டையர் பிரிவின்கீழும், இதேபோல், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒற்றையர், இரட்டையர் பிரிவின்கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 135 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு விளையாடினர். இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் ரொக்க பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில், விடுதி மேலாளர் சாந்தி, பயிற்சியாளர் திலகவதி மற்றும் மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags : District Carrom Competition ,
× RELATED தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே...