முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு

ஈரோடு, அக். 23:முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கதிரவன் எச்சரித்துள்ளார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் கதிரவன் பேசியதாவது: அனைத்து தாலுகா அளவிலும், ஒவ்வொரு துறையிலும் முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அவற்றை முழுமையாக பதிவேற்றம் செய்து அதன் நடவடிக்கை விபரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் 57 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. அதில், பல்வேறு காரணத்தால் தள்ளுபடியானது தவிர மீதமுள்ள 29,416 மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, நிலுவை மனுக்கள் மீது தீர்வு காண அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் கதிரவன் பேசினார்.

Related Stories: