வரட்டுப்பள்ளத்தில் 66.8 மி.மீ. மழை

ஈரோடு, அக்.23: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு டவுனில் இரவு 7 மணிக்கு பெய்த மழை, இரவு வரை நீடித்தது. இதேபோல், சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்ததால் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. மாவட்டத்தில், அதிகபட்சமாக வரட்டுப்பள்ளத்தில் 66.8 மில்லி மீட்டரும், பவானிசாகர் பகுதியில் 64.2 மில்லி மீட்டரும் மழை பதிவானது.நேற்று காலை காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): ஈரோடு- 7, பெருந்துறை- 32, பவானி- 3.4, கோபி- 4.4, சத்தி- 4, எலந்தகுட்டைமேடு- 8.2, தாளவாடி- 11, கவுந்தப்பாடி- 22, கொடுமுடி- 2.2, அம்மாபேட்டை- 27.6, சென்னிமலை- 7, குண்டேரிப்பள்ளம்- 8.4, கொடுமுடி- 4.6, மொடக்குறிச்சி- 6 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

Related Stories: