தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி சந்தையில் விற்பனை விறுவிறுப்பு

ஈரோடு, அக்.23: தீபாவளி பண்டிகை நெருங்குவதால் நேற்று நடந்த ஜவுளி சந்தையில் 90 சதவீதம் ஜவுளிகள் விற்பனையானது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோட்டில் வாரந்தோறும் திங்கள் இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரை ஜவுளி சந்தை நடைபெறும். ஈரோடு திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, கனி மார்க்கெட், பழைய சென்ட்ரல் தியேட்டர் பகுதியில் நடக்கும் இந்த ஜவுளி சந்தையில் ஜவுளி ரகங்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி  பண்டிக்கைக்காக வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தையில் மக்களை கவரும் வகையில் புதிய டிசைன் ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2  வார சந்தையில், தீபாவளி விற்பனைக்காக தமிழகத்தை சேர்ந்த பிற மாவட்ட வியாபாரிகளும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா வியாபாரிகளும் அதிகளவில் வந்து ஜவுளிகளை வாங்கி சென்றனர்.

இந்நிலையில், தீபாவளிக்கு இன்னும் சில 4 நாட்களே இருப்பதால், நேற்று நடந்த ஜவுளி சந்தைகளிலும், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கனி மார்க்கெட் கடைகளிலும் ஜவுளிகளை வாங்க மக்கள் கூட்டம்நிரம்பி வழிந்தது. இதில், சில்லரை விற்பனையில் வாங்க பொதுமக்களும், மொத்த விற்பனையில் வாங்க வியாபாரிகளும் குவிந்ததால் 90 சதவீதம் ஜவுளிகள் விற்பனையானது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: