×

மனநோயாளி கல்வீச்சு அரசு விரைவு பஸ் கண்ணாடி உடைந்தது

நாங்குநேரி,  அக். 23:  நாங்குநேரி அருகே மனநோயாளி கல்வீசி தாக்கியதில் அரசு விரைவு பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.திசையன்விளையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை அரசு விரைவு பேருந்து புறப்பட்டு சென்றது. கங்கைகொண்டான் அடுத்த மேட்டுபிராஞ்சேரியை சேர்ந்த ராம்குமார் (40) பஸ்சை ஓட்டினார். நாங்குநேரி  தாலுகா அலுவலகம் அருகே பஸ் வரும்போது சாலையோரம் நடந்து சென்ற மனநோயாளி ஒருவர், திடீரென கல்லை எடுத்து வீசியதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து  ராம்குமார் அளித்த புகாரின் பேரில் நாங்குநேரி எஸ்ஐ மார்க்கரெட்  திரேசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : state ,
× RELATED அரசு நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்