×

பரப்பாடி, மருதகுளத்தில் வாகன சோதனையில் ரூ.96 ஆயிரம் பறிமுதல்

நாங்குநேரி, அக். 23: நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பறக்கும்படை அலுவலர் தினேஷ் குமார் தலைமையிலான குழுவினர், பரப்பாடி அருகே பற்பநாதபுரத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த காரில் எவ்வித ஆவணமும் இன்றி ரூ.41,650 மற்றும் வாக்காளர் பட்டியல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த திசையன்விளையை சேர்ந்த ராஜன் மகன் அருண் மற்றும் ஏமன் புதுக்குளத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் காந்த் ஆகியோர் மீது விஜயநாராயணம் போலீசில் திணேஷ்குமார் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் மூன்றடைப்பு அருகே மருதகுளத்தில், பறக்கும்படை அலுவலர் தினேஷ்குமார் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர் அதில் வந்த அதே ஊரைச் சேர்ந்த ஜெயக்குமார் (55) என்பவரிடம் ரூ.14,500 மற்றும் அவருடன் வந்த ஜேக்கப் என்பவரிடம் ரூ.40 ஆயிரம் இருப்பதும் தெரிய வந்தது. அதற்கான எவ்வித ஆவணமுமின்றி கொண்டு வரப்பட்டது தெரிந்தது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், மூன்றடைப்பு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Rs ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு...