×

தீபாவளி விற்பனை மும்முரம் குற்ற சம்பவங்களை தடுக்க 32 இடங்களில் சிசிடிவி காமிரா

புதுக்கோட்டை, அக். 23:
புதுக்கோட்டை நகர பகுதியில் தீபாவளி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருவதால் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 32 இடங்களில் சிசிடிவி காமிரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.திபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொருட்கள் வாங்க புதுக்கோட்டை நகர் பகுதியை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கீழ ராஜ வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் மாவட்ட போலீஸ் சார்பில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க அந்தந்த பகுதிகளில் 32 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.இந்த கேமராக்களுக்கு அந்த பகுதியிலேயே கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க 24 மணி நேரமும் போலீசார் பணியில் உள்ளனர். இதனை மாவட்ட எஸ்பி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : places ,Diwali ,
× RELATED புதுவையில் மது விற்பனை கடும் சரிவு