×

புதுக்கோட்டையில் மின்னல் தாக்கி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எம்பி ஆறுதல்

புதுக்கோட்டை, அக்.23: மின்னல் தாக்கி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திருச்சி எம்பி திருநாவுக்கரசர் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூரை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் கீழமுத்துக்காட்டில் கடலை அறுவடைப் பணியில் ஈடுபட்டபோது மின்னல் தாக்கியதில் 4 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பாதிப்புக்குள்ளானோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் மின்னல் தாக்கி உயிரிழ்ந்தவர்களின் குடும்பத்தினரையும், காயம் அடைந்தோரையும் திருச்சி எம்பி திருநாவுக்கரசர் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Tags : victims ,Pudukkottai ,lightning attack ,
× RELATED அம்பன் புயலால் உயிரிழந்தவர்களின்...