×

வங்கிகள் இணைப்பை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

புதுச்சேரி, அக். 23: மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை எதிர்த்து புதுவையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதனால் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டன. பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு கடந்த மாதம் வெளியிட்டது. இதற்கு வங்கி அதிகாரிகள் மட்டுமின்றி ஊழியர்கள் சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கண்டித்து கடந்த மாதம் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்த நிலையில் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 22ம் தேதி வங்கிகள் இணைப்பு அறிவிப்பை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

 அதன்படி நேற்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்றன. புதுவையிலும் வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 75க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதன் காரணமாக வங்கியில் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டு வியாபாரிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.


Tags : Bank employees ,banks ,
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்