இயக்குனர் அலுவலகத்தில் சுகாதார துணை செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

்புதுச்சேரி, அக். 23: புதுவையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 100க்கும் மேற்பட்ட துணை செவிலியர்களும், சுகாதார மேற்பார்வையாளர்களும் நிரந்தர பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த ஓராண்டுகளாக இவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் செப்டம்பர் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படாத நிலையில் கடந்தாண்டை போல் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பும் இல்லை. இதனால் விரக்தியடைந்த துணை செவிலியர்களும், மேற்பார்வையாளர்களும் பணிகளை புறக்கணிக்கும் வகையில் நேற்று விடுப்பு எடுத்து சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமர்ந்து திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertising
Advertising

சங்க பொதுச்செயலாளர் சாயிரா பானு தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது பண்டிகை காலம் என்பதால் உடனடியாக 2 மாத நிலுவை ஊதியம் மற்றும் போனசை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: