மழை பாதிப்புகள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் தகவல்

திருக்கனூர், அக். 23: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து தற்போது பெய்து வரும் தொடர் மழையால் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தை சேர்ந்த அனைத்து கிராமங்களிலும், தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை உடனுக்குடன் வெளியேற்றவும், மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நடமாடும் ஜெனரேட்டர் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மோட்டார்கள் இயக்கி தடையின்றி குடிநீர் வழங்கவும், இயற்கை சீற்றங்களால் சாய்ந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் தேவையான டீசல் இன்ஜின், மரம் அறுக்கும் இயந்திரம், பொக்லைன் இயந்திரம், நடமாடும் குடிநீர் டேங்கர் மற்றும் தேவையான அனைத்து வாகனங்களும், உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.

Advertising
Advertising

மேலும், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு இளநிலை பொறியாளர் சாந்தன் (9345929245), களப்பணியாளர்கள் குருமூர்த்தி, கலைசெல்வன் ஆகியோரும், திருபுவனை தொகுதிக்கு இளநிலை பொறியாளர் பாஸ்கர் (9443616899), களப்பணியாளர்கள் கிருஷ்ணா ரெட்டி, கிருஷ்ண சந்திரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். துப்புரவு மற்றும் குடிநீர் பராமரிப்பு பணிகளுக்கு ஓவர்சீயர் சச்சிதானந்தம் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அவரை 9345705088 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மழை நிவாரண பணிக்காக பொக்லைன் இயந்திரம், நடமாடும் குடிநீர் டேங்க், நடமாடும் ஜெனரேட்டர், மினி லாரி, டிராக்டர் டோசர், டிராக்டர், டிப்பர் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக ஆணையரை தொடர்பு (9443364016, 9786884401) கொண்டு மழை பாதிப்பு பணிகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக் ெகாள்ளப்படுகிறது.

நிவாரண பணிக்கு தேவையான டீசல், பிளீச்சிங் பவுடர் மற்ற குடிநீர் பராமரிப்பு உபகரணங்கள் இருப்பில் உள்ளது.

 மேலும், பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை பதிவேட்டில் பதிவு செய்து உடனடியாக மேற்பார்வை அலுவலர்கள், கள பணியாளர்களிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, மேற்பார்வை ஊழியர்கள், இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறை எண் - 0413 2540161ல் தொடர்பு கொண்டு மழை பாதிப்புகளை 24 மணி நேரமும் தெரிவித்து உடனுக்குடன் பாதிப்புகளை சரி செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

Related Stories: